தாயுமானவர் திட்டம் – முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்
காஞ்சிபுரம், செப்டம்பர் 14:
காலை 8 மணி அளவில், நியாயவிலைக் கடை ஊழியர்கள் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் வீடு தேடி சென்று அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் 18வது வட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி மல்லிகா இராமகிருஷ்ணன் நேரடியாக வீடு, வீடாகச் சென்று முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அழைத்து வந்து, அவர்களுக்கே தன் கரங்களால் ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் வி.எஸ். இராமகிருஷ்ணன் மற்றும் 18வது வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்தின் மூலம், 18வது வட்டத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் யாருடைய உதவியும் இன்றி தங்களது வீட்டு வாசலில் அத்தியாவசிய பொருட்களை பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இத்திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாமன்ற உறுப்பினர் மல்லிகா இராமகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments