டிஎஸ்பி சங்கர் கணேஷ் திடீர் கைது உத்தரவு – காஞ்சிபுரத்தில் சினிமாவை மிஞ்சிய காட்சிகள், டிஎஸ்பி மாயம் பரபரப்பு
‘சிமெண்ட் முருகன்’ என்ற பெயரில் அறியப்படும் முருகன், தனது மீது நடைபெற்ற அடிதடி சம்பவம் குறித்து காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் எஸ்.சி./எஸ்.டி. (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை அலட்சியம் காட்டுவதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
கைது உத்தரவு :
வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல், புகாரின் தீவிர தன்மை மற்றும் காவல்துறை காட்டிய அலட்சியம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.
அதன்படி, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக கைது செய்து, வரும் செப்டம்பர் 22 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டதும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
டிஎஸ்பி மாயம் – பரபரப்பான காட்சிகள் :
இந்தநிலையில், டிஎஸ்பியை சிறையில் அடைக்க காவல்துறையினர் தயாரானபோது, நீதிமன்ற வளாகத்தில் அதிகமான பொதுமக்கள் கூட்டம் திரண்டது. அந்த பரபரப்பின்போது, டிஎஸ்பி சங்கர் கணேஷ் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் கூறுவதற்கு, சில காவலர்கள் உதவியுடன் டிஎஸ்பி தப்பிச் சென்றிருக்கலாம் என்றும், இதுகுறித்து நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகாத நிலையில், காஞ்சிபுரம் முழுவதும் சூடுபிடித்த விவாதமாக மாறியுள்ளது.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
No comments
Thank you for your comments