Breaking News

காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

 

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு இன்று (09.09.2025) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பை எழுதி கையொப்பமிட்டார்.

இந்நிகழ்வில்  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர்.காந்தி

சட்டமன்ற உறுப்பினர்கள்  க.சுந்தர்சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை  ஆ.மனோகரன், மாநகராட்சி மேயர்  எம். மகாலட்சுமி யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!




No comments

Thank you for your comments