Breaking News

ரூ.82.5 லட்சத்தில் 12 தொகுப்பு வீடுகள் – பூமி பூஜை


 தருமபுரி :

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பெல்லுஅள்ளி பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூ.82.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய 12 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.


இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ஏற்கனவே 86 வீடுகள் கட்டப்பட்டு மக்கள் வசிப்பில் உள்ளன. தற்போது, கூடுதல் வீடுகள் கட்டுவதற்காக 82 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு, இலங்கை தமிழர் மறுவாழ்வு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, புதிதாக 12 வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

✍️ ப.இளம்பரிதி, தருமபுரி மாவட்ட செய்தியாளர்



No comments

Thank you for your comments