Breaking News

சத்தியவாடி பொன்மணி அம்மன் – ஆலந்துறையீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது

விருத்தாசலம்.

விருத்தாசலம் அருகே சத்தியவாடி  பொன்மணி அம்மன், ஆலந்துறையீஸ்வரர் திருகோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்மிக விமர்சையாக நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சத்தியவாடி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகுஅழகிய பொன்மணி அம்மன் உடனுறை அருள்மிகு ஆலந்துறையீஸ்வரர் திருக்கோவில் ஜீர்ணோத்தாரான அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 



கடந்த 27 ஆம் தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, லட்சுமி ஹோமம் ,கோ பூஜை, மாலையாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல் கால யாகம பூர்ணாஹீதிஉபசாரம் மகா தீபாரதனை காட்டப்பட்டது

28ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகவேள்வி நடைபெற்று மாலை மூன்றாம் கால யாக வேள்விகள்நடைபெற்ற  நிலையில்

இன்று காலை நான்காம் கால யாக வேள்விகள் நடைபெற்று பூர்ணாஹீதி தீப ஆராதனை யாத்திரா தானம் செய்யப்பட்டு கடம் புறப்பாடு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட குடங்களை தலையில் சுமந்து மேல தாலத்துடன் கோவிலை வலம் வந்து விமானத்தின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது

இந்த மகா கும்பாபிஷேகத்தைசத்தியவாடி மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டுமகா கும்பாபிஷேகத்தை கண்டு களித்து இறைவனின் பேரருளை பெற்றனர்

இந்த கும்பாபிஷேக விழாவினைஇந்து அறநிலையத்துறை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர்பிரேமா,செயல் அலுவலர் மாலா,மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர் இந்த விழாவில் ஒன்றிய திமுக செயலாளர் வேல்முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments