முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்; கூட்டணி பேச்சுக்கு இடமில்லை – பிரேமலதா விஜயகாந்த்
காஞ்சிபுரம் :
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை,அஷ்டமி திதியை முன்னிட்டு, சக்தி பீட ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோருடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.
காமாட்சியம்மன் கோவிலில் வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த் காமாட்சி அம்மன் மூலவர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். காமாட்சி அம்மன் கோவிலில் வலம் வந்த பிரேமலதா மற்றும் அவர்கள் மகன்கள் இருவரிடமும் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,
முதலமைசருக்கு வந்து உடல்நிலை சரியில்லை அப்படின்றதுனால, ஒரு அரசியல் நாகரீகத்துடன், பண்பாடுடன், நட்பு ரீதியாக அவரைப் போய் நாங்க சந்திச்சோம்.
ஏன்னா, கேப்டன் வந்து உடல்நிலை சரியில்லாதபோது, ஒவ்வொரு வாட்டியும் அவர் நேரா வந்து கேப்டனை சந்திச்சு இருக்காரு, அறிக்கை விடுவாரு. அதே மாதிரி, கேப்டன் மறைவுக்கு நீங்க எல்லாரும் பார்த்தீங்க, கவர்மெண்ட் எவ்வளவு தூரம் இறுதி மரியாதையிலிருந்து, தீவு திடல்ல இருந்து எல்லாமே அவங்க வந்து பண்ணிக் கொடுத்திருக்காரு.
இன்னைக்கு நேத்துல,எங்க திருமணமே அவர் கலைஞர் தலைமையில நடந்தது. அந்த காலத்துல இருந்து இப்ப வரைக்கும் அவங்க ஃபேமிலி பிரண்ட்ஸ்தான்.
கேப்டனுக்கு எல்லாம் கலைஞர் வந்து 40, 45 வருஷமாப் பழக்கம். உங்க எல்லாருக்கும் அது தெரியும். அதே மாதிரி, கலைஞர் மறைந்தபோது, அமெரிக்காவுல நாங்க இருந்தாலும், எப்படி கேப்டன் அழுதார் அப்படிங்கறதும் எல்லாரும் பார்த்திருக்கீங்க. அதுமட்டும் இல்ல, அவ்வளவு டயர்ட்ல, அவ்வளவு தூரம் அமெரிக்காவுல இருந்து வந்து இறங்கின உடனே, நேரடியாக கலைஞர் சமாதிக்குச் சென்று அவருக்கு வந்து மரியாதை செலுத்திட்டு தான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னார்.
ஏன்னா, அதுக்கு பேஸ் வந்து என்னன்னா, மரியாதை, நட்பு தான். அந்த வகையில்தான் நானும் போய் முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமா சந்திச்சோம்.
அங்க ஃபேமிலி எல்லாமே இருந்தாங்க, உதயா இருந்தாரு, அண்ணி இருந்தாங்க, அமைச்சர்கள் இருந்தாங்க. நாங்களும் தம்பி சுதீஷ், பார்தசாரதி, எங்க கட்சி நிர்வாகிகளோட போய் அவரை வந்து சந்திச்சோம். அவருக்கு ரொம்ப சந்தோஷம், அவரு ரொம்ப சந்தோஷப்பட்டாரு. வந்ததுக்கு நன்றின்னு உடனே ட்விட்டர்ல அவர் பதிவு போட்டாரு, உதயாவுப் போட்டாரு. அதுக்கு நானும் திருப்பி நன்றி சொல்லிருக்கேன்.
அரசியல்லா அதே போனத்துல இருக்கக் கூடாது. எல்லாரும் மனிதர்கள் தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு நாகரீகமான ஒரு சந்திப்புதான்.
இப்ப வந்து ஒருத்தரை போய் நம்ம சந்திச்ச உடனே, அவங்களோட கூட்டணி அப்படின்றது, நம்ம ஊர்ல ஒரு கலாச்சாரமா இருக்கு.
நான் நேத்து கூட நம்ம பிரஸ் மீட்ல தெளிவா சொன்னேன்.
நாளை மறுநாள் நம்ம வந்து தமிழ்நாடு முழுக்க, உள்ளம் தேடி, இல்லம் நாடி அப்படின்னு எங்க தொண்டர்களை சந்திப்போம். கேப்டன் உடைய ரத யாத்திரை. மக்களைத் தேடி, மக்கள் தலைவர் அப்படின்னு ரெண்டு விஷயத்தை நாங்க வந்து தமிழ்நாடு முழுக்க நாங்க கொண்டு போக இருக்கிறோம்.
ஆகஸ்ட்3 ம் தேதி கும்மிடிபூண்டியில இருந்து ஆரம்பிக்கிறோம்ங்க. 23-வது தேதி வரைக்கும் முதற்கட்ட சுற்றுப்பயணம். அதுக்கப்புறம் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என்று தமிழ்நாடு முழுக்க எங்க பயணம் இருக்கப்போகுது. நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்ன மாதிரிதான், எங்க கட்சி வளர்ச்சி, தொண்டர்களைச் சந்திக்கிறது, கட்சியை வளர்க்கணும், வரப்போகின்ற தேர்தலுக்கு அவங்களை தயார் படுத்தணும், பூத் கமிட்டி அமைச்சு, இன்னைக்கு எல்லா இடத்துலயும் பிஎல் டூ வாங்கிட்டாங்க. அதே மாதிரி, எல்லாமே கட்சியை ஸ்ட்ராங் பண்ணிட்டு இருக்கோம். இப்போ எங்களுடைய போக்கஸ் வந்து அதுதான். அப்படியே போகும்போது மக்களையும் நாங்க சந்திக்க இருக்கிறோம்.
அதனால, இப்பொழுதுக்குக் கூட்டணி அப்படின்ற பேச்சுக்கே இடமே கிடையாதுங்க.
இந்த ஒரு ஏழு, எட்டு மாசம் இருக்கு. இந்த ஏழு, எட்டு மாசமும் மக்கள் சந்திப்பும், தொண்டர்கள் சந்திப்பும், தமிழ்நாடு முழுக்க,
ஜனவரி 9ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு அறிவிச்சிருக்கோம். அப்பதான் அது இறுதி கட்டத்தை அடையும். அப்பதான் அந்த அறிவிப்பு வரும்போது அதுதான் கரெக்டா இருக்கும்.
தமிழ்நாடு முழுக்கங்க, படுகொலைகள், சிறுவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்றது என்று பல விஷயங்கள் இங்கு நடந்துகிட்டு இருக்கு. இப்பப் பார்த்தோம்னா,கவின் அப்படிங்கிறவரை வந்து ஆணவக் கொலைகள் செய்தாங்க. சின்ன குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்றாங்க. அதே மாதிரிப் பார்த்தா, ரியல் எஸ்டேட் அதிபர்களைப் படுகொலை செய்றது. ஒரு லாயர்ஸ்சே கோர்ட்டுக்கு வெளியே வச்சு வெட்டுறாங்க.
இதெல்லாம் வந்து சட்டமுழுங்கு மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியா இன்னைக்கு இருக்குதுன்றதுல மாற்று கருத்து இல்லை.
அதற்கு அடிப்படை என்ன என்று பார்த்தால், கஞ்சா, டாஸ்மார்க், போதை வஸ்துக்களை அதிகம் பயன்படுத்துவது தான், அவர்களை மிருகங்களாக மாத்துது. அதனால, அண்ணன் ஸ்டாலின் அவர்கள் கிட்ட தான் சட்டமுழுங்கு இருக்கு. அவர் வந்து இதை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். எல்லா இடத்திலுமே வந்து இதை வந்து ஸ்ட்ராங் பண்ணி, போலீஸை வந்து முடிக்கி, இனிமேல் இந்த மாதிரி ஒரு நிகழ்வுகள் தமிழ்நாட்டுல எங்கும் நடக்காதவனும், காப்பாத்தணும். இப்பக் கூட நான் அறிக்கை கொடுத்துட்டு தான் வந்தேன். கவின் அவர்களுக்கும், எல்லாருக்கும் இது நிச்சயம் தடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இது இப்ப நேத்து என்ன நடக்குதுன்னு சொல்லுங்க. எந்த ஆட்சி வந்தாலும், அந்த ஆட்சி வந்து மக்களுடைய வரிப்பணத்துல தான் நடக்குது.
அவங்க யார் ஆட்சியாளர்களோ அவங்க பேர்லயும் வந்து, அவங்க பேரை வைக்கிறது, இது வந்து யூசுவலா தமிழ்நாட்டுல பல ஆண்டுகளா நம்ம பார்த்துக்கிட்டு இருக்கோம். இப்ப இவங்க ஆட்சி இருக்கிறதுனால, இவங்க பேரு. இதுக்கு முன்னாடி இருந்தவங்க ஆட்சியில அவங்க பேரு.
ஆனா மக்கள் வரி பணத்துல ஒரு திட்டம் வரும்போது எந்த ஒரு தனி நபருடைய பேர் வைக்கிறது, வரவேற்புக்குரியது அல்ல. அது தவறான ஒரு முன் உதாரணம்.
நான் போய் சந்திச்சது மரியாதை நிமித்தம் தான். அதுக்கு நீங்க என்ன வந்து கற்பனையில நீங்க என்ன யோசிச்சாலும் அதுக்கு எனக்கு வந்து பதில் இல்லை. நான் தெளிவா இருக்கேன். அவர் வந்து கேப்டனை சந்திச்சிருக்காரு பலமுறை. அது மட்டும் இல்ல, மேயரா ஜெயிச்சப்போவும், அமைச்சரா பதவி ஏக்குறப்போ, முதலமைச்சரா பதவி ஏக்குறப்போ, கேப்டன பார்த்து பிளஸ்ஸிங் வாங்குவாரு. அது இன்னைக்கு நேத்து இல்ல, பல வருஷமா. உதயா கூட இந்த வாட்டி பாருங்க, அமைச்சரா வந்த உடனே கேப்டன்ட்ட வந்து பிளஸ்ஸிங் வாங்குனாரு.
இன்னைக்கு லாக்டவுன் கொலைகளை ஏகப்பட்டது நடந்துட்டு இருக்குங்க. விசாரணையிலே அழைச்சிட்டு போறாங்க. அடிச்சு கொல்றாங்க. நான் கூட இன்னைக்கு இங்கிலாந்துல நடந்துச்சா, நேரா போய் அவங்களுடைய துக்கத்துல பங்கேத்தேன்.
இன்னைக்கும் அதே மாதிரி கைதிகளை வந்து அடிக்கிறாங்க பார்த்தேன். நான் என்ன சொல்றேங்க, இது நீதி அரசர்கள் இருக்காங்க, இதுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்தணும்.
அதே மாதிரி ஆளும் திமுக, யார் சட்டமும் ஒழுங்கு கையில வச்சு, முதலமைச்சர் தான் இதுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்தணும். போலீஸ் வந்து அவங்கள வந்து அவங்க கடமையை தான் செய்யணும். அதை மீறி அடிக்கிறதோ, விசாரணை என்ற பேர்ல அடித்து கொல்வதோ ஏற்படுத்துவது எதுவுமே கிடையாதுங்க. இது மிகப்பெரிய ஒரு தவறான முன் உதாரணமாக மாறிடும். இது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.
அரசியல் என்றது நம்பிக்கைதான். இன்னைக்கும் அவங்க ஆட்சி நம்ம பண்ணிக்கிட்டு இருக்கோம். நம்ம ஜெயிக்கோன்ற நம்பிக்கையில அவங்க சொல்றதுதான். நான் கூட தான் இதுக்கு முன்னாடி எல்லாம் சொன்னேன், நாங்க இருக்கும் கூட்டணி தான் ஜெயிக்கும்.
200 இல்ல 234 தொகுதிகளையும் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஜெயிக்கும்னு சொல்றோம். அது எப்படி சொல்றோம்? நம்பிக்கை. அரசியல் என்பது நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையினால தான் அது வருது.
மக்கள் தானே இறுதி எஜமானர்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. 26ல் பாப்போம் என்றார்.
Premalatha Vijayakanth Clarifies DMK Meeting Was Not Political – No Alliance Talks Yet | Kanchipuram 2025



No comments
Thank you for your comments