Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் – 13 ஆகஸ்ட் நடைபெறும் இடங்கள்

தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரவையில் அறிவித்தபடி, மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரக பகுதிகளில் 155 முகாம்களும் — மொத்தம் 224 முகாம்கள் நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் 25 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 53 முகாம்களும் — மொத்தம் 78 முகாம்கள் 15.07.2025 முதல் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் இம்முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, நாளை (13.08.2025) நடைபெறும் முகாம்கள்:

  • காஞ்சிபுரம் மாநகராட்சி: விளக்கடி கோயில் தெரு பிரசாத் சத்திரம் (வார்டு எண் 33)
  • குன்றத்தூர் ஒன்றியம்: சென்னாக்குப்பம் சமுதாய கூடம் (ஒரகடம், சென்னாக்குப்பம்)
  • திருப்பெரும்புதூர் ஒன்றியம்: O.M. மங்கலம் சமுதாய கூடம் (காப்பாங்கோட்டூர், சிவபுரம், O.M. மங்கலம், பிச்சிவாக்கம், செல்லம்பட்டிடை)
  • வாலாஜாபாத் ஒன்றியம்: சிங்காடிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (மருதம், சின்னிவாக்கம், சிங்காடிவாக்கம்)
  • காஞ்சிபுரம்: கோனேரிக்குப்பம், சண்முகா நகர் லயன்ஸ் கட்டிடம் (கோனேரிக்குப்பம்)
  • குன்றத்தூர்: சிக்கராயபுரம் திருமுருகா மினி மண்டபம் (சிக்கராயபுரம், சிவன்தாங்கல்)

பொதுமக்கள் தங்கள் குறைகளை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments

Thank you for your comments