Breaking News

காஞ்சிபுரத்தில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

காஞ்சிபுரம், ஆக.25:

காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்து புதிய மாணவ, மாணவியர்க்கு சேர்க்கை ஆணைகளையும் வழங்கினார்.


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் துறையில் திறன் மிக்க பணியாளர்களை உருவாக்கும் விதமாக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்களின் குழந்தைகள் படித்திட ஏதுவாக இந்நிதியாண்டில் புதிதாக 7 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.பின்னர் 33 மாணவ, மாணவியர்க்கு நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை ஆணைகளையும் வழங்கினார்.திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.

எம்பி க.செல்வம்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் காயத்ரி நன்றி கூறினார். விழாவில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் மாணவ,மாணவியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments