Breaking News

கோயம்புத்தூர் ஈஸ்ட் ரோட்டரி கிளப்"கேரிங் ஹாண்ட்ஸ், விஜிஎம் மருத்துவமனை மற்றும் அறக்கட்டளை இனைந்து விஜிஎம் மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் திறப்பு விழா....!

கோவை திருச்சி சாலையில் இயங்கிவரும் பிரபல விஜிஎம் மருத்துவமனையில் கோயம்புத்தூர் ஈஸ்ட் ரோட்டரி கிளப் கேரிங் ஹாண்ட்ஸ் உலகளாவிய மானிய திட்டத்தின் கீழ், மற்றும் விஜிஎம் மருத்துவமனை அறக்கட்டளை இணைந்து "கேரிங் ஹாண்ட்ஸ் விஜிஎம் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் டயாலிசிஸ் மையத்தை நிறுவியுள்ளது.



இது குறித்து ரோட்டரி கிளப் சார்பில் தெரிவிக்கையில் 59,000 டாலர் மதிப்புள்ள இந்த திட்டத்தின் நோக்கம்,பொருளாதார வசதியில்லாத சிறுநீரக நோயாளிகளு க்கு தரமான,மலிவான டயாலிசிஸ் சிகிச்சையை வழங்குவதாகும்.இதில் விஜிஎம் அறக்கட்டளை, 20,000 டாலர் நிதியை வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் டாக்டர் மித்ரா பிரசாத் அவர் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் வழிகாட்டியதால் இந்த முயற்சி நனவானது. மேலும் கிளப் தலைவர் விஜய் கிருஷ்ணன் பேசுகையில் "சமூகத்தின் முக்கிய சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய, நிலையான சேவைத் திட்டங்களை எங்கள் கிளப் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது" என்று வலியுறுத்தினார்.உடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ் சித்தார்த் செயலாளர் செல்வகுமார் TRF தலைவர் J சஞ்சீவி குமார் ஆகியோர், கிளப் நிர்வாகத்தின் தலைமையினால் இந்த டயாலிசிஸ் மையம்,சாத்தியமா யிற்று என்று பேசினர்.



முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் செல்லா கே. ராகவேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக PDG ராஜசேகர்,டி.ஆர்எப்சி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும், விஜிஎம் மருத்துவமனை தலைவர் டாக்டர் VG மோகன் பிரசாத் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் Dr. சுமன் CPS, கிளினிக்கல் & கல்லீரல் நிபுணர் Dr. மித்ரா பிரசாத் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



விஜிஎம் அறக்கட்டளை - சார்பில் கூறுகையில் மனமுள்ள நற்பண்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்களை கிஃப்ட் அ டயாலிசிஸ்" திட்டத்தில் பங்கேற்க அழைக்கிறது.டயாலிசிஸ் சிகிச்சை செலவுகளை நிதியுதவி செய்வதன் மூலம், பல குடும்பங்களின் சுமையை குறைத்து, உயிர்களை காப்பாற்றலாம். என்று தெரிவித்தார்.

No comments

Thank you for your comments