ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,35,000 கனஅடி நீர் வரத்து – சுற்றுலா தடை நீடிப்பு
- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 1,35,000 கன அடியாக அதிகரிப்பு,
- 4 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,35,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
- கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
- நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கேரளா, கர்நாடகா காவிரி பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது,
நீர்வரத்து காரணமாக கர்நாடகா அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை முதலே படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது,
4 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,35000, ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆறு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதன் காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.
No comments
Thank you for your comments