Breaking News

காஞ்சிபுரத்தில் வேளாண்மைப் பல்கலை அமைக்க கோரிக்கை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம்

காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரத்தில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பன உட்பட 12 தீர்மானங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழுவின் 25 வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை வகித்து மாநாட்டினை தொடக்கி வைத்தார்.மூத்த உறுப்பினர் கே.ராஜகோபால் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். 



கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளை தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்.

மாவட்ட புதிய செயலாளராக பி.வி.சீனிவாசன்,துணைச் செயலாளர்கள் ஜெ.கார்த்திக்,எல்.தங்கராஜ், மாவட்ட பொருளாளராக ஜெ.கமலநாதன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினரும் தேர்வு செய்யப்பட்டனர். புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் பி.வி.சீனிவாசன் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது, மின் கணக்கீட்டை மாதம் தோறும் எடுப்பது, புகர் பேருந்து நிலையம் அமைப்பது, பாலாற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவது மற்றும் பாலாற்றில் 3 கி.மீக்கு ஒரு தடுப்பணை அமைப்பது என்பன உட்பட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவெற்றப்பட்டன.

No comments

Thank you for your comments