Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 20) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறும் இடங்கள்

 காஞ்சிபுரம், ஆக.19:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 224 முகாம்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 78 முகாம்கள் நடைபெற்றன. தற்போது இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 12 வரை மேலும் 74 முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 23 மற்றும் ஊரகப்பகுதிகளில் 51 முகாம்கள் நடைபெறும்.

முகாம்களில் பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களின் உடல்நலனுக்காக மருத்துவ முகாம்களும் இணைந்து நடத்தப்படுகின்றன. குறிப்பாக “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள்” இம்முகாம்களில் மட்டுமே பெறப்படும்.

அதன்படி, நாளை 20.08.2025 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பின்வரும் இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறுகின்றன:

  • காஞ்சிபுரம் மாநகராட்சி – அரசு நகர்
  • உத்திரமேரூர் சாலை – சாய் மனோன்மணி திருமண மண்டபம்
  • மாங்காடு நகராட்சி – கே.கே. நகர் சமுதாய நலக்கூடம்
  • குன்றத்தூர் வட்டம் – கரசங்கால், துண்டல்கழனி, JC மஹால்
  • திருப்பெரும்புதூர் வட்டம் – சந்தவேலூர் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில்
  • வாலாஜாபாத் நகர்ப்புற பஞ்சாயத்து – ஏனாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
  • குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்து – தரப்பாக்கம் சரோஜா மஹால்

பொதுமக்கள் தங்கள் குறைகளை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Thank you for your comments