Breaking News

போக்குவரத்து ஊழியர்கள் மூன்றாம் நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்

ஓய்வுகால பலன்கள்; ஊதிய நிலுவை, அகவிலைப்படியை வழங்க அரசுக்குக் கோரிக்கை

காஞ்சிபுரம் போக்குவரத்து ஊழியர்கள் மூன்றாம் நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்


காஞ்சிபுரம், ஆக 20-

அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காஞ்சிபுரம் பேருந்து பணிமனை முன்பு மூன்றாம் நாளாக புதனன்று (ஆக.20) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வுபெற்ற 3,500 தொழி லாளர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் ஓய்வுக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்; பணி யில் உள்ளவர்களுக்கு 2 வருட ஊதிய ஒப்பந்த நிலுவை, 12 மாத அகவிலைப்படி நிலுவை ஆகிய வற்றை வழங்க வேண்டும். 

1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; 94 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு ஒப்பந்தப்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 

தவணை முறையில் வழங்கு வதற்கு நீதிமன்றத்தில் அவகாசம் கோராமல், இதர துறைக்கு இணையாக அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரத்தில், பேருந்து பணிமனை முன்பு சங்கத்தின் தலைவர் எஸ்.மாயக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன  மாநில இணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 

சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசன், பொருளாளர் ஜி.கமலக்கண்ணன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலை வர்கள் என்.நந்தகோபால், டி.ரவி,   ஆகியோர் பேசினர்.

அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் ஓய்.சீதாராமன், விதொச காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் சி.சங்கர், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மின்திட்ட கிளை தலைவர் ஆர்.மதியழகன், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.

No comments

Thank you for your comments