Breaking News

மோன்ட்ரா எலக்ட்ரிக் கோவையில் முதல் சிறிய வர்த்தக எலக்ட்ரிக் வாகன டீலர்ஷிப் திறப்பு விழா..!

மோன்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனம் சிறிய வர்த்தக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான முதல் டீலர்ஷிப் திறந்து கோவையில் தடம் பதித்தது... டிவிஎஸ் வெஹிக்கிள் மொபிலிட்டி சொல்யூஷன்ஸுடன் இணைந்து முதல் விற்பனையை துவங்கி புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது.



கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த ஷோரூமில், சிறிய வர்த்தக பயன்பாட்டு வாகனமான இ-வியேட்டர் (EViator) வாகனம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.இந்த வாகனம் நகரங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்து மற்றும் சந்தையில் ஏற்றுமதி பணிகளுக்கு சிறந்த தீர்வாகும். 80 கிலோவாட் மோட்டார், 245 கி.மீ. பயணக்கூறல் மற்றும் 7 வருட உத்தரவாதம் கொண்ட இ-வியேட்டர் வாகனம் குறைந்த பராமரிப்பு செலவுடன் நவீன டெலிமெடிக்ஸ் தொழில் நுட்பத்தையும் வழங்குகிறது.கோவை ஷோரூம் திறப்பு விழாவில், மோன்ட்ரா எலக்ட்ரிக் தலைமைச் செயல் அலுவலர் .சாஜு நாயர் மற்றும் டிவிஎஸ் வெஹிக்கிள் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் தலைமைச் செயல் அலுவலர் மது ரகுநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவங்கி வைத்தனர்.



இது குறித்து.சாஜு நாயர் கூறுகையில், “கோவை சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் கொண்டு வருவது பெரும் முன்னேற்றம்.” என அவர் தெரிவித்தார்.மோன்ட்ரா எலக்ட்ரிக் தனது மாநிலம் மற்றும் நாட்டளாவியமாக சிறிய வர்த்தக வாகனங்களுக்கான வணிகத் தளங்களையும் சேவைகள் மையங்களையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் மோன்ட்ராவின் முன்னணி இடத்தை மேலும் உறுதிப்படுத்தும்.என்று தெரிவித்தார்.



மேலும் எங்களது சேவை விற்பனையேடு இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எங்களது சேவை வழங்கவுள்ளோம். வாடிக்கையாளர் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்று அணுகினால் அவர்கள் செல்லும் வழியில் சார்ஜ் ஏற்றும் வசதிகள் எங்கு உள்ளது என்றும் அதே சமயத்தில் வாகனங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சென்று தீர்வு காணும் வகையில் பல்வேறு சேவைகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

No comments

Thank you for your comments