Breaking News

கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு பொது சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் மலரஞ்சலி செலுத்தினார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை 80வது வார்டுக்கு உட்பட்ட செட்டி வீதி பகுதியில் பொது சுகாதார குழு தலைவரும் மாநகர் மாவட்ட வர்த்தக அமைப்பாளருமான 
பெ.மாரிச்செல்வன் தலைமையில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்விற்கு பகுதி செயலாளர் என். ஜி முருகேசன் வார்டு செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாநிலத் தீர்மான குழு இணைச்செயலாளர் நாச்சிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



அதனைத் தொடர்ந்து பொதுசுகாதார தலைவர்  மாரிச் செல்வன்  80 வது வார்டு பொம்மன் செட்டி காலனியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைப்பதற்கான இடங்களை கள ஆய்வு மேற்கொண்டார்.அதனைத்தொடர்ந்து பொது மக்கள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் முடிவுரும் வரை பொது குடிநீர் குழாய்களை அகற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர் அதற்கு பாதாள சாக்கடை பணிகள் முடிந்து குடிநீர் குழாய்கள் அமைத்து உங்களது இல்லங்களில் குடிநீர் வரும் வரை இந்த குழாய்களை அகற்ற மாட்டோம் என்று  கூறினார்.



மேலும் குறிஞ்சி கார்டனில் ஒரு சில வீடுகளில் குடிநீர் சரிவர வராததை கண்டறிந்து மாநகராட்சி அலுவலர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக  சரி செய்யுமாறு உத்தரவிட்டார் .மேலும் அப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா ஒப்பந்ததாரரை அழைத்து உடனடியாக பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுங்கள் என்றும் ஒப்பந்த பணியாளர்களிடம் நீங்கள் பராமரிப்பு பணிகளை தொய்வில்லாமல் பொதுமக்கள் குறை கூறாதவாறு செய்ய வேண்டும் என்றார். மேலும் தளபதியாரின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீங்கள் பணி செய்யாத பட்சத்தில் கவுன்சிலர் ஆகிய எனக்கும் தளபதியாரின் அரசிற்கும் பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும்.



எனவே பொதுமக்கள் புகார் தெரிவிக்காத வண்ணம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் பராமரிப்பு பணிகளுக்கு பொதுமக்களிடத்தில் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்று கண்டிப்புடன் எச்சரித்தார்.வார்டு செயலாளர் தங்கவேல் மற்றும் வானவன் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments