நடிகர் சூர்யாவின் 50வது பிறந்த நாளையொட்டி குமரகோட்டம் கோவிலில் வெள்ளித்தேர் வழிபாடு
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கந்தபுராணம் அறங்கேறிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் வெள்ளி திருத்தேர் உற்சவமானது நடைபெறும்.

அந்த வகையில் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையையொட்டியும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாள் ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட சூர்யா நற்பணி மன்றம் மாவட்ட நிர்வாகி கணேசன் தலைமையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் உற்சவமூர்த்தி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வள்ளி தேவானையுடன் பச்சை நிற பட்டுடுத்தி பல்வேறு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருளி கற்பூர தீபாராதனைகள் காட்டப்பட்டது.
நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாளை ஒட்டி நீடூடி வாழ வேண்டியும் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சூர்யா நற்பணி மன்றம் அகில இந்திய கௌரவ தலைவர் ராஜசேகர் அவர்கள் கலந்து கொண்டு அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை வணங்கி ஏராளமான சூர்யா ரசிகர்கள், பக்தர்களுடன் வெள்ளித் தேரினை கோவில் உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபட்டனர்.
மேலும் அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
பின் சூர்யா நற்பணி மன்றம் சார்பில் சூர்யா பிறந்தநாள் ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
Actor Suriya’s 50th Birthday Celebrated at Kanchipuram Kumarakottam Temple with Silver Chariot Procession and Annadanam

No comments
Thank you for your comments