முசரவாக்கம் அரசுப்பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு வெற்றி – ரூ.1 லட்சம் பரிசு வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம்,ஜூலை 16:
காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், "கடலில் மூழ்கும் நேரத்தில் எளிதாக தப்பிக்க வழிகாட்டும் கண்டுபிடிப்பு" ஒன்றை உருவாக்கினர். இந்த கண்டுபிடிப்பு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டதையடுத்து ரூ.ஒரு லட்சம் ரொக்கப்பரிசினை இன்று (புதன்கிழமை) அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
பள்ளிகளின் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் போட்டிகள் நடைபெற்றன.
இதற்கான ரொக்கப்பரிசாக ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாணவர்களிடம் வழங்கினார்.
இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் கூறியதாவது..
மாநிலம் முழுவதும் இருந்து 725 அணிகள் போட்டியில் பங்கேற்றதில் முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் தேர்வாகியுள்ளது.கப்பலில் செல்லும் போது கடலில் மூழ்கி விட்டால் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற புதிய கண்டுபிடிப்பினை எமது பள்ளி மாணவர்கள் கண்டு பிடித்திருந்தார்கள்.
இதற்காக மாநில அளவில் முசரவாக்கம் அரசுப்பள்ளி போட்டியில் வென்றது. சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் எம் பள்ளி மாணவர்களுக்கு ரூ.ஒரு லட்சத்துக்கான பரிசுத்தொகையை வழங்கினார்.
#MusravakkamGovtSchool
#InnovationAward
#StudentInvention
#TamilNaduSchools
#STEMEducation
#ScienceExhibition2025
#AnbarasanMinister
No comments
Thank you for your comments