Breaking News

சின்னக்காஞ்சிபுரம் தும்பவனம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது

 காஞ்சிபுரம், ஜூலை 15:

சின்னக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் கல்விக்குத் திருவிழி கண்டவருமான காமராஜரின் பிறந்த நாள் (ஜூலை 15) "கல்வி வளர்ச்சி நாள்" விழாவாக செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடத்தப்பட்டது.



இந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.மலர்கொடி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருபாநிதி முன்னிலை வகித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் சில்க்ஸ் உரிமையாளர் திரு.பி.சுந்தர் கணேஷ் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகளை வழங்கினார். மேலும், "கல்விக்காக காமராஜர் செய்த சாதனைகள்" எனும் தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.

அதேபோல், மாணவர்களில் ஒருவரின் தந்தையான திரு.பாலாஜி தனது சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

விழாவின் இறுதியில் ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments