Breaking News

வாலாஜாபாத் அரசுப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம், ஜூலை 30:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.


பள்ளிக்கல்வித்துறையும், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை நடத்தினார்கள்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதுநிலை திட்ட மேலாளர் ராஜவேல் தலைமை வகித்தார்.முதுநிலைத் திட்ட மேலாளர்கள் சரவணன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி கலந்து கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பலகையை வெளியிட்டார்.

கருத்தரங்கில் கைபேசியை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருப்பதால் ஏற்படும் விளைவுகள்,போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள், மாணவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் உத்திகள் ஆகியன குறித்து கருத்தரங்கில் பலரும் பேசினார்கள். 

ஏற்பாடுகளை உதவித் திட்ட மேலாளர் மேகலா,ஒன்றிய மேலாளர் ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.


Anti-Drug Awareness Seminar Held at Valajabad Government School by Hand in Hand India and School Education Department

No comments

Thank you for your comments