Breaking News

பூந்தண்டலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு


காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், பூந்தண்டலம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை இன்று (05.07.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.



காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், பூந்தண்டலம் ஊராட்சியில் , தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வேர் மண்டலம் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் முறையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பூந்தண்டலம் ஊராட்சியில் உள்ள புதுநல்லூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (AGAMT) 2025-26-ன்கீழ் ரூ.11.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தகன மேடை மற்றும் தகன மேடைக்கு சாலை அமைத்தல் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


பின்பு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (AGAMT) 2025-26-ன்கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் மன்னாதீஸ்வரர் கோயில் குளம் புனரமைத்தல் பணியினை பார்வையிட்டு, ஊராட்சியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கலைஞர் கனவு இல்லம் குடியிருப்பினை பார்வையிட்டு, பூந்தண்டலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, குழந்தைகளின் உரையாடி, கற்றல்திறனை கேட்டறிந்தார்கள்.

தொடர்ந்து திருப்பெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைகடையினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பூந்தண்டலம் ஊராட்சி அலுவலகத்தில் (Solar System ரூ. 2.70 மதிப்பீட்டிலும், Wind Mill ரூ.4.4 இலட்சம் மதிப்பீட்டிலும்) அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். இவ் ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, ஊரக வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments