வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் – பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு!
📅 போட்டிகள் நடைபெறும் தேதி
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2025 - 26ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு 21.07.2025 திங்கள்கிழமையன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி 22.07.2025 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறுகிறது.
📅 போட்டிகள் நடைபெறும் இடம்
வேலூர் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துப்பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கும் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய) மற்றும் அனைத்துக் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணாக்கர்களுக்கும் தனித்தனியே அரசு விதிமுறைகளின்படி, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் வேலூர், ஊரிசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற உள்ளன.
🏆 பரிசு தொகைகள் (ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக):
இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே
- முதல் பரிசாக ரூ.5000/-
- இரண்டாம் பரிசாக ரூ. 3000/-
- மூன்றாம் பரிசாக ரூ. 2000/-
மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.
அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் இருவரை மட்டும் தனித்தனியே தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.
பள்ளி மாணாக்கர்களுக்கான போட்டிகள் 21.07.2025, 22.07.2025 ஆகிய நாள்களில் முற்பகல் 9.00 மணி தொடங்கியும், கல்லூரி மாணாக்கர்களுக்கான போட்டிகள் முற்பகல் 10.00 மணிக்கு தொடங்கியும் நடத்தப்பெறவுள்ளன.
📌 பங்கேற்பு விவரங்கள்:
வேலூர் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க முடியும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவரும், ஒரு கல்லூரியிலிருந்து இரண்டு மாணாக்கரும் பங்கேற்க முடியும்.
📚 பேச்சுப் போட்டி தலைப்புகள்:
அண்ணல் அம்பேத்கர் போட்டிக்கு
பள்ளி மாணவர்களுக்கு
1) பூனா உடன்படிக்கை
2)கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்
3) அரசியலமைப்புச் சட்டமும், அம்பேத்கரும்
4) அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் என்ற தலைப்புகளிலும்
கல்லூரி மாணாக்கர்களுக்கு
1) முதல் சட்ட அமைச்சர்
2) அம்பேத்கரின் சாதனைகள்
3) அம்பேத்கரும் பௌத்தமும்
4) அரசியல் சாசனத்தின் சிற்பி என்ற தலைப்புகளிலும்
முத்தமிழறிஞர் கலைஞர் போட்டிக்கு
பள்ளி மாணவர்களுக்கு
1) நெஞ்சுக்கு நீதி
2) செம்மொழி மாநாடு
3) திரைத் துறையில் முத்தமிழறிஞர்
4) அரசியல் வித்தகர் கலைஞர்
5) தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற தலைப்புகளிலும்,
கல்லூரி மாணாக்கர்களுக்கு
1) சமூக நீதிக் காவலர் கலைஞர்
2) குறளோவியம்
3) கலைஞரின் எழுதுகோல்
4) அரசியல் வித்தகர் கலைஞர் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளிலும் பேசுவதற்குரிய தயாரிப்புடன் மாணாக்கர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணாக்கர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர்/கல்லூரி முதல்வரிடம் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு
கூடுதல் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே (தொலைபேசி எண் 0416-2256166) தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
#VelloreSpeechContest
#Ambedkar2025
#KalaignarBirthday
#TamilDevelopment
#SchoolCollegeStudents
#SpeechCompetitionTN
No comments
Thank you for your comments