இன்று காஞ்சிபுரத்தில் மேற்கு ராஜ வீதியில் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை கோலாகல திறப்பு விழா
காஞ்சிபுரம் ஜூலை 16:
ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் மேனேஜிங் டைரக்டர் கே. விநாயகம், எக்ஸ்கியூட்டிவ் டைரக்டர் கே. விக்ரம் நாராயண் ஆகியோர் காஞ்சிபுரத்தில் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-
எங்கள் நிறுவனத்தின் 63- ஆண்டுகள் வேற்றி பயணத்தின் துவக்கமாக இன்று காஞ்சிபுரத்தில் மேற்கு ராஜ வீதியில் புதியதாக (குமரக்கோட்டம் முருகன் கோவில் எதிரில்) ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
காஞ்சி காமாட்சி அம்மன் அருளாலும் மக்களுக்கு மிகப்பெரிய அளவு எங்களுடைய தங்க நகைகளை வாங்குவதற்கு நல் வாய்ப்பும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் திறப்பு விழா நடைபெறுகிறது.
திறப்பு விழாவில் சலுகையாக ஒரு பவுன் தங்க நகை வாங்கினால் 2500 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வைரங்களுக்கு 20 சதவீதம், வெள்ளிக்கு நூறு சதவீதம் மற்றும் வழங்க முடிவு செய்து உள்ளோம் .இந்த தள்ளுபடிகள் 16-ந்தேதி தொடங்கி 20- ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும்.
எங்களது 63 வருட சேவையில் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உயிர் நாடி அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கொடுத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழ்நாட்டிலே முதல்முறையாக பி ஐ எஸ் முத்திரை வாங்கி நிறுவனம் நம்முடைய நிறுவனம் தான். மேலும் காஞ்சிபுரத்தில் இல்லாத புதிய புதிய வடிவமைப்புகள், டிசைன்கள் இந்த 51-வது புதிய கிளைகள் கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
மேலும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை வாடிக்கையாளர்கள் மற்றும் காஞ்சிபுரம் மக்கள் நல் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கூறினார்
No comments
Thank you for your comments