Breaking News

சட்டீஸ்கர் மாநில வனத்துறை அமைச்சர் காஞ்சிபுரம் கோயில்களில் தரிசனம்

காஞ்சிபுரம், ஜூலை 13:

சட்டீஸ்கர் மாநில வனத்துறை அமைச்சர் கேதர் காஷ்யப் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். 


சட்டீஸ்கர் மாநில வனத்துறை அமைச்சராக இருந்து வருபவர் கேதர் காஷ்யப். இவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் ஆகியனவற்றில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சங்கர மடத்தின் மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் கோயில் ஸ்தானீகர்கள் அமைச்சருக்கு கோயில் பிரசாதம் மற்றும் காமாட்சி அம்மன் உருவப்படமும் வழங்கினர்.

No comments

Thank you for your comments