குடும்பமாக ஏலச்சீட்டு நடத்தி சுமார் 2 கோடிக்கு மேல் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பியிடம் புகார் மனு
இந்நிலையில் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு முடிந்த 20 மாத தவணையிலான பத்து லட்சம் ரூபாய் ஏலச்சீட்டுக்கு,சீட்டு தொகை கட்டிய நபர்களுக்கு உரிய தொகை கொடுக்காமல் சுமார் 2கோடிக்கு மேல் பணத்தை ஏமாற்றிவிட்டதாக, சீட்டு கட்டிய நபர்கள் இது குறித்து நடவடிக்கை எடுத்திட ஏற்கனவே மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் அப்புகாரின் மீது இதுவரை எவ்வித உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தினால் இன்று மீண்டும் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
மேலும் சேகரின் மனைவி வளர்மதி,சேகரின் மூத்த மகன் முரளி அவருடைய மனைவி ரேகா, சேகருடைய மற்றொரு மகன்கள் மணி, முருகன் உள்ளிட்ட அனைவரும் காலம் காலமாக பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சேகரின் மூத்த மகன் முரளி ஏலச் சீட்டை நடத்தி வந்ததாகவும், இவர் தனது மனைவி ரேகா பெயரில் 2020ல் புதிய வீட்டுமனை வாங்கியதாகவும் கூறப்படுகின்ற நிலையில்,
இருபது மாதங்கள் நடைபெற்ற 10 லட்ச ரூபாய் ஏலசீட்டு தொகையை 20 நபர்களுக்கு மேலாக ஏமாற்றி, இரண்டு ஆண்டுகள் சீட்டு முடிந்த பின்பும் உரிய பணம் வழங்காததால் தங்கள் பணத்தை கேட்டு சேகர் வீட்டிற்கு சென்ற போது என் மகன் தற்சமயம் மூளை சுவாதம் இல்லாத காரணத்தால், எங்களால் சீட்டு பணத்தை வசூலிக்க இயலாததால், உங்களுடைய பணத்தை தர முடியாது என சேகர் கூறியதாகவும், 20 மாத ஏலச்சீட்டு முழுவதுமாக கட்டி ஏமாந்த தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
திடீரென சீட்டு பணம் இல்லை என சேகர் கூறிய நிலையில்,சேகர் தனது மூத்த மகன் முரளியின் மனைவியும் மருமகளான ரேகா மீது சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தனது மூத்த மகனி. முரளி பெயரில் எந்த சொத்தும் இல்லை என கூறி முரளியிடமே சீட்டு தொகையை பெற்றுக் கொள்ளுங்கள் என சேகர் ஏமாற்றி வருவதாகவும்,இதனால் தாங்கள் மிகுந்த மன உளச்சலுக்கு உள்ளாவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எங்களது குடும்ப வாழ்வாதாரத்தை மீட்டிடவும்,பிள்ளைகளின் கல்வியும் தடைப்பட்டுள்ளதாலும் தங்களது பணத்தை விரைவாக பெற்று தர வேண்டும் எனவும் பாதிக்கபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments