Breaking News

காஞ்சிபுரத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு முகாம் - ஆட்சியர் தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம்,ஜூன் 27:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தின் போது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு முகாமை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்து பார்வையிட்டார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட வன அலுவலர் ரவிமீனா,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குநர் ராஜ்குமார் வரவேற்றார். இக்கூட்டத்தில் 11 விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 7,51,150 மதிப்பிலான பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள்,5 விவசாயிகளுக்கு ரூ.1,01,409 மதிப்பில் வேளாண் இடுபொருட்களையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் 20 விவசாயிகளுக்கு ரூ.55,80,249 மதிப்பிலான மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களையும் ஆட்சியர் வழங்கினார்.கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு முகாமையும் ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

வேளாண் இயந்திரங்கள் கண்காட்சியில் விசை உழுவை இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம், களையெடுப்பான்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தது. 

கணகாட்சியை ஆட்சியருடன் காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தர் ஆகியோரும் பார்வையிட்டனர்.

No comments

Thank you for your comments