Breaking News

காஞ்சிபுரத்தில் 247 திருநங்கைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

காஞ்சிபுரம், ஜூன்.5:

காஞ்சிபுரத்தில் 247 திருநங்கைகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வியாழக்கிழமை வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் 20 மாற்றுத்திறனாளிகள், 227 திருநங்கைகள் உட்பட மொத்தம் 247 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. 

விழாவிற்கு எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் எம்.மகா லட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் வரவேற்று பேசினார். 

விழாவில் திருநங்கைகளில் 55 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா,48 பேருக்கு குடும்ப அட்டை, 58 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பணி ஆணை, 85 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உட்பட மொத்தம் 247 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத் தலைவர் நித்யா.சுகுமார், சார் ஆட்சியர் ஆஷிக்அலி, ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், திமுக மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளர் ஜெகன்னாதன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நிறைவாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments