தமிழக வெற்றி கழகம் சார்பில் வாலாஜாபாத் பகுதியில் மெகா இலவச மருத்துவ முகாம் – 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர்!
காஞ்சிபுரம் :
அதற்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்ட தவெக கட்சியின் புதிய மருத்துவர் அணி சார்பில், வாலாஜாபாத், பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில், முதல் முறையாக மெகா இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமை மாவட்ட செயலாளர் திரு. தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்து, நேரில் வந்த நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
20க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்தவர்கள் கொண்ட குழுவால் கண், தொண்டை, மகப்பேறு, பொதுநோய் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் 200க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை செய்து, பயன்பெற்றனர். கிராம மக்கள் இவ்வாறு சொல்லுகின்றனர்:
“தவெக சார்பில் இவ்வாறு ஒரு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது இது முதன்முறையாகும். இதுபோன்ற சேவைகள் தொடர வேண்டும்.”
இந்த நிகழ்ச்சி, கிராமப்புற மக்களின் நலனை கருதி செயல்படும் தமிழக வெற்றி கழகம் தனது சமூகப் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருவதை வலியுறுத்துகிறது.
No comments
Thank you for your comments