Breaking News

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை - காஞ்சிபுரம் முதன்மை நீதிபதி பேச்சு

காஞ்சிபுரம் :

விட்டுக் கொடுப்பவர்கள் எப்போதும் கெட்டுப் போவதில்லை என புதன்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் சமரச விழிப்புணர்வு தின பேரணியின் நிறைவில் பேசினார்.


காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சார்பில் சமரச தின விழிப்புணர்வு நாளையொட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் வந்து நிறைவு பெற்றது. பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் சமரச தீர்வு மையத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு துண்டபிரசுரங்களையும்,வெள்ள நிறை கைக்குட்டைகளையும் வழங்கி பேசியது..

உச்ச நீதிமன்றம்,உயர்நீதிமன்றங்கள் உட்பட மாவட்ட நீதிமன்றங்களிலும் சமரச தீர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் உங்கள் வழக்குகளை சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்புமாறு நீங்களோ அல்லது வழக்குரைஞர் மூலமாகவோ வேண்டுகோள் விடுக்கலாம்.

சமரச மையங்கள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தீர்வுகளை தருவதுடன் உறவுகளை மேம்படவும் வழிவகுக்கிறது.தீர்வு மையத்தின் மூலம் விசாரிக்கப்படும் வழக்குகள் மனித உறவுகளையும்,சமூக உறவுகளையும் மேம்படுத்துகிறது.

சமரச மையங்கள் உங்கள் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால் ஏற்கனவே செலுத்தியிருந்த நீதிமன்ற கட்டணமும் திருப்பி ஒப்படைக்கப்படும்.ஒரு வேளை சமரசம் ஏற்படவில்லையெனில் நீங்கள் உங்கள் வாதத்தை மீண்டும் நீதிமன்றங்கள் மூலம் தொடங்கலாம்.

சமரச மையங்களில் நீங்கள் உங்களது எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் வழக்குக்கு விரைவான தீர்வும் கிடைத்து விடும்.எனவே விட்டுக் கொடுப்பவர்கள் எப்போதும் கெட்டுப் போவதில்லை என்றும் முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் பேசினார்.

பேரணியை தொடக்கி வைத்ததுடன் அப்பேரணியிலும் கலந்து கொண்டார்.பேரணியில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.சரவணக்குமார், சார்பு நீதிபதி அருண்சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி திருமால், தலைமைக்குற்றவியல் நீதிபதி வசந்தகுமார்,அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்,நீதிமன்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments