Breaking News

இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வையிட்டார்

காஞ்சிபுரம், மார்ச்.4:

காஞ்சிபுரம் அருகே கீழக்கதிர்ப்பூரில் செயல்பட்டு வரும் பட்டுப்பூங்காவினை இங்கிலாந்து நாட்டின் துணைத் தூதுவர் ஹலீமா ஹாலந்த் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.


காஞ்சிபுரம் அருகே கீழக்கதிர்ப்பூரில் பட்டுப்பூங்கா செயல்பட்டு வருகிறது.இப்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினசரி தரமான பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

இப்பட்டுப் பூங்காவினை இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர் ஹலீமா ஹாலந்த் பார்வையிட வந்திருந்தார். அவருக்கு பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் பூங்கா செயல்படும் விதங்களை விளக்கி கூறினார்.

பட்டுப்பூங்காவில் சேலைகள் உற்பத்தி செய்யப்படும் விதங்கள்,வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பட்டுச்சேலைகள் ஏற்றுமதி செய்யும் விபரங்கள், பட்டுச் சேலைகளில் பாரம்பரிய கலைகளை வடிவமைக்கும் விதம் ஆகியன குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பின்னர் பூங்காவில் பணிபுரியும் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.துணைத்தூதுவர் பார்வையிடும் போது பட்டுப்பூங்காவின் தலைவர் சுந்தர்கணேஷ் உடன் இருந்தார்.

No comments

Thank you for your comments