காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி
காஞ்சிபுரம், மார்ச்.21:
காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப்பிரிவு சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரமலான் பண்டிகையையொட்டி இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.சிறுபான்மைப்பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் ஹ.காலித் அகமது தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முருகன் சாந்தகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் லியாகத் ஷெரீப்,சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப்பிரிவின் மாநில தலைவர் முகம்மது ஆரிப் கலந்து கொண்டு ரமலான் பண்டிகை மற்றும் இப்தார் நோன்பு துறப்பு ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார்.பின்னர் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக சேலைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் வழக்குரைஞர்பிரிவு மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் அருள்ராஜ், நிக்கோல்ராஜ்,சீனிவாச ராகவன், மாநகர தலைவர் நாதன் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாநிலத்தலைவர் முகம்மது ஆரிப் தலைமையில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments
Thank you for your comments