Breaking News

மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்

 காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மகளிர் தின விழா   வெள்ளிக்கிழைமை  (மார்ச் 14)அன்று MAHER  பல்கலைகழக கல்லூரி இணை வேந்தர் திருமிகு.ஆகாஷ்பிரபாகர் மற்றும் MAHER பல்கலை., கழக  வேந்தர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி  மருத்துவ கல்லூரியின் புகார் குழுமத்தின்( ICC) சார்பாக காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அரங்கில் சிறப்பாக  கொண்டாடபட்டது.


இவ்விழாவில் குற்றவியல் செயல் முறை  துறையின் (TAC) காஞ்சிபுரம் துணை இயக்குனர்( ம) ஆலந்தூர் உதவி இயக்குனர் வழக்குரைஞர்  திருமதி.இராசேந்திரன் காயத்திரி ML அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் நலன் மற்றும் பாதுகாக்கும்  பொருட்டு  நடைமுறையில் உள்ள அரசின் சட்டப்பிரிவுகள் ம பணிகள்  என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார்.

மகளிர், பணி நேரத்திலும், மருத்துவம் பயிலும் போதும், பெண்குழந்தைகள் மற்றும் சிறு குழைந்தைகள் எதிர் கொள்ளும் அன்றாட  பாலியல் ரீதியாக ஏற்பட கூடிய இன்னல்களையும்  ,அவற்றை தவிர்க்கும் வழிகளையும், சட்ட பூர்வமாக அனுகும் வழிமுறைகளை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார் 

முன்னதாக  காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்ட அரங்கில் கல்லூரி முதல்வர் கே.வி.ராஜசேகர் தலைமையுறை ஆற்றினார்.

மருத்துவ மனைளகண்காளிப்பாளர் மரு. பூபதி மகளிரின் மாண்பு போற்ற பட வேண்டும் பாதுகாக்கபட வேண்டும் என்று கூறினார். கல்லூரி துணை முதல்வர் மரு.ஈஸ்வரி மகளிரின் அருமை பெருமைகள் பற்றியும் அவர்கள் ஆற்றியுள்ள சாதனைகள் பற்றியும் எடுத்துரைத்தார் முன்னதாக  பேராசிரியர் மரு. கலா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மருத்துவ கல்லூரியின் புகார் குழுமத்தின் ( ICC ) தலைவர் மரு .இந்து சிறப்பு உரை ஆற்றினார் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கபட்டன. மரு.அத்திபா நன்றி கூறினார். 

இவ்விழாவில் மருத்துவ மனை நிலைய மருத்துவர் இராதா, மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவிகள், மாணவர்கள், செவிலியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாநிகழ்வுகளை மரு,மகேந்திரன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

No comments

Thank you for your comments