பிரபல ரவுடி வசூல்ராஜா வெடி குண்டு வீசி கொலை செய்த சம்பவத்தில் 10 பேர் கைது
2018ம் ஆண்டு நடந்த நிவாஸ்கான் என்பவர் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் வசூல்ராஜா கொலை.
காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வசூல்ராஜா. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. காவல் துறையின் அறிவுரையின் பெயரில் தற்போது எந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் டிராவல்ஸ் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருக்காலிமேடு சிவன் கோயில் எதிரே உள்ள ரேஷன் கடை வாசலில் கடந்த 11ம் தேதி வசூல்ராஜா நின்று கொண்டிருந்த போது அவர் எதிர்பார்க்காத நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென ராஜா மீது நாட்டு வெடிகுண்டு வீசிய போது அது மார்பு பகுதியில் பட்டத்தின் விளைவாக அப்பகுதி முழுவதும் சிதைந்து அதே இடத்தில் நிலை குலைந்து உயிரிழந்தார்.
வெடி சத்தம் கேட்டதும் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் வெளியே வந்து பார்க்கும்போது அவரது உடல் சிதைந்த நிலையில் இருந்ததும் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் விரைந்து வந்து புலன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சம்பவம் இடத்திற்கு தற்போது இரண்டு ஏ டி எஸ் பி தலைமையிலான குழுவினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகள்
மோப்பநாய் உதவியுடன் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய கொலையாட்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் வசூல்ராஜா கொலை வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 1. ராமன் (எ) பரத், 2.சிவா, 3.திலீப்குமார், 4. சூர்யா, 5. சுரேஷ், ஆகிய ஐந்து பேரை தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருமால்பூர் ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ராமன் (எ) பரத், சிவா, திலிப்குமார், ஆகிய மூவரும் தண்டவாளத்தில் தடுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய ஜாகிர் உசேன், சுல்தான், மோகனசுந்தரம், மணிமாறன், சரண்குமார், ஆகிய ஐந்து பேரையும் அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஜாகிர் உசேன் என்பவர் தப்பிக்க இயன்ற போது அருகில் இருந்த பள்ளத்தில் கால் தடுக்கி கீழே விழுந்ததில் கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
வசூல்ராஜா கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்பது கத்திகள் நான்கு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தலை மறைவாக உள்ள மேலும் இரண்டு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு வழித்தீர்க்கும் ஜாகிர் உசேன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வசூல்ராஜாவை வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 10 பேரையும் காஞ்சிபுரம் தாலுக்கா போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments
Thank you for your comments