Breaking News

முதலமைச்சர் பிறந்த நாள் விழா: மாநில வர்த்தக அணி சார்பில்லத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாநில வர்த்தக அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா -சிறப்புரையாற்றிய காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்,  கழக வர்த்தகர் அணி மாநில செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்.

1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தையல் இயந்திரம்,கைப்பேசி, அரிசி,முடிதிருத்துவோர் உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



காஞ்சி தெற்கு மாவட்டம் முழுவதும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 72 இடங்களில் மாபெரும் கூட்டம் நடைபெறுகிறது.

அதில் ஒரு பகுதியாக காஞ்சி தெற்கு மாவட்ட  திமுக மாநில வர்த்தக அணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள நடுத்தெருவில் நடைபெற்றது.

கழக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்பாட்டிலும்  காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம்,கழக மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்  ஆகியோர் கலந்து கொண்டு தமிழக முதலமைச்சர் ஏழை எளிய மக்களின் நலனுக்காக செய்த திட்டங்கள், சாதனைகளை,இந்தித் திணிப்பு, நிதி பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக  சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தையல் இயந்திரம்,முடித்திருத்துவோர் உபகரணம்,கைப்பேசி,அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு,வேட்டி,சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் சின்பிராண்ட ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன்,பகுதி செயலாளர்கள், வர்த்தக அணி நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments