மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் சிறப்புப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக வழங்கப்பட்டுள்ளது. 864 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் ரூ.8.00 கோடி மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1500/-லிருந்து ரூ.2000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. சிறப்புபள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கு ஊதியம் ரூ.14000/-லிருந்து ரூ.18000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில் மூலம் ரூ.18 இலட்சம் மதிப்பில் வங்கி கடன் மானியம் 81 பயனாளிகளுக்கு, பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (PMEGP,UYEGP) 11 பயனாளிகளுக்கு 1,20,000/- மதிப்பிலான வங்கி கடனுதவிக்கான மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய அடையாள அட்டைகள் 15385 பயனாளிகளுக்கும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் (UDID) 13727 பயனாளிகளுக்கும், ரூ. 2.99 கோடி மதிப்பில் இணைப்புச்சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 574 பயனாளிகளுக்கும், ரூ.70 இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை 494 பயனாளிகளுக்கு, 3 சிறப்பு பள்ளிகள் மற்றும் தன்னார் தொண்டு நிறுவனங்களுக்கு வாடகை மானியம், உணவூட்டும் மானியம் மற்றும் ஆசிரியர் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.85.50 இலட்சமும், ரூ.12.6 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரம் 210 பயனாளிகளுக்கும், ரூ.20.00 இலட்சம் மதிப்பில் கையடக்க திறன்பேசி (Smart Phone) 158 பயனாளிகளுக்கு ம் வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ரூ.51.50 இலட்சம் மதிப்பீட்டில் 50 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், ரூ.1.65 இலட்சம் மதிப்பீட்டில் 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பார்வையற்றோருக்கான மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசியும் என வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம், ஆகிய 4 திருமண நிதியுதவி திட்டங்களின்படி, 2024-25 நிதியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டத்தினை சேர்ந்த மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.21,50,000/- மதிப்பிலான நிதியுதவியும் மற்றும் 8 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 392 கிராம் ரூ.29,82,042/- மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. இதில் 12 பத்தாம் வகுப்பு பயின்ற பயனாளிகளும், 37 பட்டதாரி பயனாளிகளும் பயனடைகின்றனர்.
மேலும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 2,474 பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளார்கள். மேலும் 2024-25 நிதியாண்டில் 613 பெண் குழந்தைகளும் பதிவு செய்யப்பட்டு வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டங்களில் 20 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் ஆக மொத்தம் ரூ.5 இலட்சம் நிதியுதவில் வைப்புத்தொகை இரசீது வழங்கப்பட்டுள்ளது. சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 128 பயனாளிகள் இலவச தையல் இயந்திரம் பெற்று பயனடைந்துள்ளார்கள். 2024-25 ஆம் நிதியாண்டில் இன்று திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டங்களில் 6 பயனாளிகளுக்கு ரூ.27,000/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரமும் மொத்தம் இன்று 75 பயனாளிகளுக்கு ரூ56.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாண்புமிகுகுறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், திரு.எஸ்.டி.கருணாநிதி, திருப்பெரும்புதூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி.சு.மாலதி டான்போஸ்கோ, குன்றத்தூர் ஒன்றியக்குழுத்துணைதலைவர் திருமதி.உமாமகேஸ்வரி வந்தேமாதரம், திருப்பெரும்புதூர் நகரமன்ற தலைவர், திருமதி.சாந்தி சதீஷ்குமார், திருப்பெரும்புதூர் நகரமன்ற துணைத்தலைவர் திருமதி.இந்ராணி சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.இரா.மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.மோ.சியாமளா, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments