குடும்பச் சன்டையில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் தற்கொலை முயற்சி.
பூந்தமல்லி :
திருமுல்லைவாயல் கமலம் நகரை சேர்ந்தவர் விநாயகம் (72) இவரது மனைவி தனலட்சுமி (62) இவர்களுக்கு தங்க கணபதி. மணிகண்டன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை,
விநாயகத்திற்க்கு சர்க்கரை நோய் காரணமாக வலது கால் முட்டி கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது மனைவியும் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிட்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கணவன் மனைவி. இடையே அடிக்கடி குடும்பத் தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு மனைவியிடம் சாப்பாடு வைக்க கணவர் விநாயகம் கூறினார். அப்போது மனைவி சாப்பாடு கொடுக்க நேரமானதால் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவர் விநாயகம் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து தனலட்சுமியை . கழுத்தை அறுத்து உள்ளார்.இதில் ரத்தம் அதிகலவில் கொட்டியதால் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனே விநாயகம் அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
நேற்று இரவு சுமார் 9 மணியளவில் வீட்டுக்கு வந்த மகன் தங்க கணபதி தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் தந்தை ரத்தகாயத்தில் மயங்கி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுபற்றி, திருமுல்லை வாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் .உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விநாயகத்தை மீட்டு அதே மருத்துவமனையில் சிக்கிசைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலைப் பற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
72 வயதில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
No comments
Thank you for your comments