அரசுப் பள்ளிகளை கல்வி கோவிலாக போற்றி விழா எடுத்த தேவரியம்பாக்கம் மக்கள்
காஞ்சிபுரம் :
இவவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்டக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும் தேவரியம்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியருமான எழில், வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய் ஆகியோர் பங்கேற்றனர்
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் ஊராட்சி மக்களின் கோரிக்கைகளான உயர் நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்தத்தவும், அரசு உயர் நிலைப்பள்ளிக்கு சுற்று சுவர் கட்ட ஏற்பாடும் செய்யப்படும் என தெரிவித்தனர்.
இவ்விழாவில் ஒன்றியக் குழு தலைவர் தேவந்திரன், துணைக்குழு தலைவர் ப சேகர், பாசறை செல்வராஜ், வாரணவாசி, பழையசீவரம், தொள்ளாழி, நத்தாநல்லூர், அகரம், அயமச்சேரி, வெண்பாக்கம் ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமலிசுதா முனுசாமி, சஞ்சய்காந்தி, தேவரியம்பாக்கம் ஊராட்சித் துணைத்தலைவர் கோவிந்தாராஜன், வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ஞானவேல், பூபதி, சூரியகாந்தி, கற்பகம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இவவிழாவில் மூன்றுப் பள்ளிகளின் மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னாள் மாணவர்கள் பெரும்பாலானோர் பங்கற்றதுடன் தங்கள் ஆசிரியர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் அஜய்குமார் அவர்களுடன் இணைந்து தேவரியம்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளி, அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மற்றும் தோணாங்குளம் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மற்றும் பணியாளர்களும் செய்தனர்
No comments
Thank you for your comments