Breaking News

மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மகப்பேறு மருத்துவ சேவை தொடக்கம்

காஞ்சிபுரம், ஜன.31:

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டு இலவசமாக செய்யப்படுவதுடன் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையாகவும் வழங்கப்படும் என அக்கல்லூரியின் வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பேசினார்.


காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்ட அரங்கில் கல்லூரி முதல்வர் கே.வி.ராஜசேகர் தலைமையில் இலவச மருத்துவ சேவைகள் தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு கூடுதல் துணை வேந்தர் சி.ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.இணை துணை வேந்தர் கிருத்திகா வரவேற்று பேசினார்.

கல்லூரி இணை வேந்தர் ஆகாஷ்பிரபாகர் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.மீனாட்சி மருத்துவப் பல்கலை மருத்துவமனை மற்றும் ஆராய்சி மையத்தின் வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் இலவச மருத்துவச் சேவைகளை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.பின்னர் இலவச சேவைகள் குறித்த கையேட்டினை வெளியிட அதனை தமிழக இலவச கல்வி பயிற்சி மையத்தின் இயக்குநர் கே.எழிலன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பேசியது..

மீனாட்சி மகப்பேறு இலவச மருத்துவ உதவித் திட்டம்,மீனாட்சி விபத்து முதலுதவி திட்டம்,மற்றும் சலுகை விலையில் மருத்துவ சேவைகளை வழங்குவது ஆகிய 3 திட்டங்களை இலவசமாக வழங்குவதை பெருமையாக கருதுகிறோம்.



காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த இலவச சேவையை பெற்று பயனடையலாம்.மகப்பேறு இலவச மருத்துவ உதவித் திட்டத்தில் சாதாரண பிரசவமும்,அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய பிரசவமும் இலவசமாகும். 

பிரசவத்துக்கு பின்னர் தாய்க்கும்,குழந்தைக்கும் செய்ய வேண்டிய பராமரிப்பு மருத்துவ செலவு,தடுப்பூசி ஆகியனவும் இலவசமாகும்.

இது தவிர மருத்துவமனையில் பிரசவித்த பெண்களுக்கு ரூ.12 ஆயிரமும் இலவசமாக வழங்கப்படும்.பிரசவம் முடிந்தபிறகு அந்த மகளிரை எங்கள் சொந்த செலவில் அவரவர்கள் இல்லதுக்கே நேரில் கொண்டு போய் விடவும் முடிவு செய்துள்ளோம்.

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சையும் ,அதற்காக தேவைப்படும் அறுவைச் சிகிச்சையும் இலவசமாக செய்யப்படும்.

எம்ஆர்ஐ ஸ்கேன்,சிடி ஸ்கேன் ஆகியன மிகக்குறைவான கட்டணச் சிகிச்சையில் வழங்கப்படும் என்றும் பேசினார்.நிறைவாக மருத்துவக்கல்லூரியின் கண்காணிப்பாளர் கே.பூபதி நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments