தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கொங்கு மண்டலம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் (எ) ராஜா, மாநில பொதுச் செயலாளர் மெஸ்மெர்காந்தன் வெள்ளையன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் தொழில் வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, கடை வாடகை 18 சதவீதம் ஜி.எஸ்.டியை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கருணாகரன், மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி கோவை மாநகர மாவட்ட தலைவர் லிங்கம், கோவை வியாபாரிகள் சங்கம் தலைவர் ராஜலிங்கம், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாநகர மாவட்ட செயலாளர் பாலமுருகன் நிர்வாகிகள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments