Breaking News

சர்வதேச அளவில் சாதனை படைத்த மாணவன் ரித்தின் சாய்!

கோவை எஸ்.என்.வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் இ பைக் ரேசில் ரித்தின் சாய் சர்வதேச சாதனை நிகழ்த்தியதையோட்டி பாராட்டு விழா நடைபெற்றது . 



இவர் இலங்கை கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச இ பைக் ரேஸில்,எஸ் என் வி குளோபல் பள்ளி ஆர் எஸ் புரம் மாணவன் ரித்தின் சாய் முதலிடம் பெற்று பெருமை சேர்த்தார். இந்த போட்டியில் மூன்று நாடுகளின் வீரர்கள் மற்றும் 12 சர்வதேச கிளப்புகள் பங்கேற்றன.8 வயதிற்குள் பிரிவில் ரித்தின் சாய் முதலிடம் பெற்றதோடு, 10 வயதிற்குள் பிரிவிலும் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை வென்றார் பள்ளியின் தாளாளர் மகாவீர் போத்ரா, ரித்திக் சாய்க்கு சிறப்பு பதக்கம் அணிவித்து வாழ்த்தியபோது, “இ பைக் ரேஸில் தனது திறமையை வெளிக்காட்டி, பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை காண அவருக்கு வாழ்த்துகள் எனக் கூறினார்.பள்ளி முதல்வர்  சாம்சன், ரித்தின் சாயின் வெற்றி மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் புதிய அத்தியாயம் உருவாக்கியுள்ளது. இவரின் பெற்றோர் அளித்த ஆதரவோடு, அவரது முயற்சி இந்த சாதனைக்கு காரணமாகியுள்ளன. இந்த வெற்றி சக மாணவர்களுக்குப் பெரிய ஊக்கமாக இருக்கிறது,” என்று பாராட்டினார்.



வெற்றி பெற்ற ரித்தின் சாய்க்கு பள்ளி நிர்வாகம் முழு கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு மற்றும் ஊக்கப் பரிசாக பல சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர்  கோபால் புராடியா, இணைச் செயலாளர்  சித்துராஜ் பாப்னா, சிறப்பு விருந்தினர் அபே ஜெயின், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ரித்திக் சாயின் சாதனையை பாராட்டினர். 



இவர் எம்.ஆர்.எப் நேஷனல் சூப்பர் கிராஸ், ஐ.எம். எக்ஸ் விருது மற்றும் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்ற பல விருதுகளும் பதக்கங்களும்  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments