Breaking News

சாய் மியூசிக்கல் அகாடமியின் 4ஆம் ஆண்டு விழா!

கோவை அசோக்நகர் பகுதியில் இயங்கி வரும் சாய் மியூசிக்கல் அகாடமியின்  4ஆம் ஆண்டு  விழா மற்றும் பயிற்சி பெற்ற மாணவர்களின் அரங்கேற்றம் ஆர்.எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.



இதில் இசைக்கச்சேரி நிகழ்ச்சியில் சாய் அகாடமியின் நிறுவனர் லட்சுமி பாபு தலைமை வகித்தார்.சாய் அகடாமியில் பயிலும்  மாணவ,மாணவியர்கள் பாடல்கள் பாடியும்,இசைக்கருவிகளை இசைத்தும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை உற்ச்சாக படுத்தினார்கள். 



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கோயமுத்தூர் சரகம் பொதுமக்கள் வழங்கள் மற்றும் உளவுத்துறை பாலாஜி சரவணன் ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.கோவை ஆர்ய வைஸ்ய சமாஜ் தலைவர் விஜயகுமார், ஆர்என்ஜே.ஜூவல்ஸ் ரகுராமன் , குழந்தை மருத்துவம் மற்றும் நியோனாட்டாலிஜிட்டு டாக்டர் அருன் பிரசாத்,, ஆடிட்டர் நாகராஜ்,, டாக்டர் கவிதா,ஹரி ஜூவல்லர்ஸ் ராகவேந்திரா கார்த்திக்,சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் அகடாமியின் பயிற்சி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments