Breaking News

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்...! - தனியார் நிறுவனங்களுக்காக பணியாற்றுகிறதா போக்குவரத்து காவல்துறை?.. சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

வேலூர் :

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதற்கு, காவல்துறை தனியார் நிறுவனங்களின் ஆதரவாளராக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர்.

கோப்பு படம்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் போக்குவரத்து நெரிசல், குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மேலும் அதிகரித்து பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக, பேருந்து நிலையம் அருகில் அரசியல் ஆதரவுடன் இயங்கும் ஜவுளி நிறுவனத்தை பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் பெருமளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கிரீன் சர்க்கிளில் அரசியல் ஆதரவுடன் செயல்படும் ஜவுளி நிறுவனத்துக்கு வரும் வாகனங்கள் சாலை ஓரங்களில் பெரும் அளவில் நிறுத்துவது, போக்குவரத்தை முற்றிலும் முடக்கி விடும் நிலை உருவாக்கியிருக்கிறது. 

அதுவும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், காவல்துறை தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், பொதுமக்களின் நலனை புறக்கணிக்கின்றதாகவும் சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

கடந்த பண்டிகையின் போதும் அந்த ஜவுளி நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

உயிரிழப்பு சம்பவம்

சமீபத்தில் கிரீன் சர்க்கிளில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு நிகழ்ந்தது. இந்த விபத்தில் அப்பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறுகின்றனர். 

இதனால் “போக்குவரத்து காவல்துறை தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றுகிறதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

 கோரிக்கை

பொதுமக்களின் நலனை கருதி, கிரீன் சர்க்கிளில் சாலையோர வாகன நிறுத்தத்தை தடுக்க வேண்டும். காவல்துறையின் நடவடிக்கைகள் தனியார் நிறுவனங்களின் ஆதரவாக இருக்காமல், பொதுமக்களின் நலனுக்காக முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் பிற முக்கிய நாள்களில் போக்குவரத்துக்கு சிறப்புச் சீரமைப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது.

மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளித்து, நிலவியுள்ள போக்குவரத்து பிரச்சினையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Thank you for your comments