Breaking News

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரிக்கை..


காஞ்சிபுரம்,ஜன.28-

தமிழ்நாட்டில் உள்ள 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதி உடன் முடிவடைந்து விட்டது. 

பதவிக்காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது. 

இந்த நிலையில் 28 மாவட்டங்களில் பதவிக்காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக

தேர்தல்  நடத்தக் கோரி சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டும் பயணத்தை தன்னாட்சி, அறப்போர், மக்களின் குரல், உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள்  நேற்று முதல்  தொடங்கி உள்ளது.

அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பிடம் ஆதரவு திரட்டும்  கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் அஜய்குமார்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் முடியும் முன்பே கலைப்பதும் நியாயம் இல்லை.அதே போல ஊரட்சிகளின் 5 ஆண்டுகள்  பதவி காலம் முடிந்ததும் தனி அலுவலர்கள் மூலம் நிர்வாகம் செய்வதும் நியாயம் இல்லை.   எனவே, தமிழ்நாட்டில் பதவிக்காலம் முடிந்த 28 மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஊராட்சி நிர்வாகத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்தில்  ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்  கருப்படைத்தட்டை வெங்கடேசன், லெனின்குமார்,பரத்,வள்ளி செல்வம் உள்ளிட்ட ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்களும் தன்னாட்சி அமைப்பு சார்பில் சரவணன், நந்தகுமார் சிவா,மக்கள் குரல் அமைப்பு சார்பில் சாரு கோவிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments