Breaking News

சென் சாய். சிரில் செல்வம் நினைவு கோப்பை நடத்தும் குடியரசு தின கராத்தே சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள்..!

கோவை  பட்டணம் ஊராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் சென் சாய். சிரில் செல்வம் நினைவு கோப்பை 2025 சார்பில் நடத்தும் குடியரசு தின கோப்பை மாநில அளவிளான கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் ஜூடி மேரி தலைமையில் நடைபெற்றது.



கராத்தே சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட  மாணவ மாணவியர்கள்  பங்கேற்றனர்.ஜேகேடிசி சிரில் கராத்தே டு இந்தியா  தலைவரும் ஆசிய கராத்தே நடுவருமான ரென்சி. சிரில் வினோத் நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கினைத்து வரவேற்புரையாற்றினார்.இப்போட்டிகளை திமுக கோவை தெற்கு மாவட்ட இலக்கிய அணித்தலைவர் பி.வி. செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், திமுக பொது குழு உறுப்பினர் முன்னால் ஒன்றிய கவுன்சிலர் ரகு என்கின்ற துரைராஜ் , கே.என்.ஹால் உரிமையாளர் ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கினார்கள். 



மேலும் ஜே கே டி சி அமைப்பு சார்பில்   ஏழை எளிய மக்களுக்கு  15 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான 2000 ரூ மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை 16 கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்கள். மேலும் 5 ஏழை மாணவ மாணவியர்களுக்கு 2 பேருக்கு தலா  ரூபாய் பத்தாயிரம் மற்றும் 3 பேருக்கு ரூபாய் ஐந்தாயிரம் வீதம் கல்வி ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போட்டி நடுவர்கள் பயிற்சியாளர்கள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments