கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா..!
கோவை சுங்கம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைரவிழா பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயுஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்டு மலர் முதல் பதிப்பை வெளியிட பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயுஸ் பெற்றுக் கொண்டார் உடன் முன்னாள் மாணவர் சங்க செயலர் ராஜ்குமார், முன்னாள் மாணவர் சங்க தலைவர் நந்தகுமார், முதன்மை குரு ஜான் ஜோசப், மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ்.முன்னாள் ஆசிரியர்கள் பிரான்ஸ் ஜோ. தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.அதனைத்தொடர்ந்து 10மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மேலும் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களையும் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கங் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி குறித்து பள்ளிக்கல்வித் துறை முன்னாள் இயக்குனர் கருப்புசாமி பேசுகையில், "மாணவர்களை நல்வழிகளில் வளர தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நட்புடன் பழக வேண்டுமென்று பேசினார்.கோவை மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் கூறுகையில் எங்களது பள்ளி முன்னால் மாணவர்கள் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் உயரதிகாரிகளாக பணி புரிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கி றது.மேலும் முன்னால் மாணவர்கள் ஒருங்கிணைந்து வைரவிழா கொண்டாடியது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நந்தகுமார், செயலா ளர் ராஜ்குமார், தாளாளர் மற்றும் முதல்வர் ஆரோக் கிய ததேயுஸ், முன்னாள் ஆசிரியர் 'ஜோ தன்ராஜ் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments