Breaking News

தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத்தலைவர் ஆர்.வேலுசாமி தலைமையில் நாராயணசாமி நாயுடுவின்திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்!

தமிழகத்தில் முதன்முறையாக விவசாயிகள் சங்கத்தை தோற்றுவித்து தமிழக விவசாயிகளின் உரிமைக்காக போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 40 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை வையம் பாளையத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில்  அரசியல் கட்சிகளான திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட  பல்வேறு அரசாயல் கட்சியினர் மற்றும்  தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு விவசாயசங்ககள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.



அதனைத்தொடர்ந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத்தலைவர் ஆர்.வேலுசாமி  தலைமையில்  நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தில் அவரது  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர் இந்நிகழ்விற்கு மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் பொருளாளர் எஸ் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.மாநிலத் துணைத் தலைவர் கே ராஜா பெருமாள் சேலம் மாவட்ட தலைவர் ஸ்ரீ வேல்முருகன் நாமக்கல் மாவட்ட தலைவர் சி புவனன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ் குமரேசன் , நாமக்கல் செயலாளர் எஸ்.ராஜு, மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதுகுறித்து மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி கூறுகையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கல் இறக்க அனுமதி அளிக்கும் கட்சிகளுக்கு எங்களது தார்மீக ஆதரவு கிடைக்கும் அவர்களுக்கு எங்களது விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அனைவரையும் ஓட்டு  போட்டு வெற்றி பெறச் செய்வோம் என்று தெரிவித்தார்.

No comments

Thank you for your comments