காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளை தொடக்கம்
காஞ்சிபுரம், டிச.26:
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள பராசரர் அரங்கத்தில் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராசாரியா சுவாமிகள் அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.
காஞ்சி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வேண்டுகோளின்படி நடைபெற்ற அறக்கட்டளை தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.
கல்லூரியின் சமஸ்கிருத துறைத் தலைவர் ஸ்ரீ சைலம் முன்னிலை வகித்தார்.தமிழ்த்துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
விழாவில் சென்னையை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் புலவர் வே.மகாதேவன் சேக்கிழார் சொன்னதும்,சொல்லாததும் என்ற தலைப்பில் பேசுகையில் சேக்கிழார் கொடுத்த குறிப்புகளால் தான் பல நாயன்மார்களின் வரலாறுகளையே தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது என்று சேக்கிழாரின் பெருமைகளை விவரித்தார்.
முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் அன்பழகன் அறிமுகவுரையும், தமிழ்ப் பேராசிரியர் சரவண.தெய்வசிகாமணி நன்றியும் கூறினார்கள்.
No comments
Thank you for your comments