Breaking News

காஞ்சிபுரத்தில் முன்னாள் படை வீரர் கொடிநாள் நிகழ்ச்சி

காஞ்சிபுரம், டிச.7:

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் முன்னாள் படை வீரர் கொடி நாள் நிகழ்ச்சிக்கு நிதி வழங்கி தொடங்கி வைத்து கொடிநாள் கையேட்டினையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை வெளியிட்டார்.


முன்னாள் படைவீரர் கொடிநாள் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.கொடிநாள் நிதி வழங்கி ஆட்சியர் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ரூ.5லட்சத்துக்கு மேல் நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு ஆளுநர் அனுப்பியிருந்த பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 

போர் மற்றும் போர் நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் ஊனமுற்ற படை வீரர்களுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து பரிசு வழங்கி கௌரவித்தார்.பின்னர் கொடிநாள் கையேட்டையும் ஆட்சியர் வெளியிட்டார்.

நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,சார் ஆட்சியர் ஆஷிக்அலி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சத்யா,ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் முஷீர் அகமது ஹிடேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் மு.சீனிவாசன் வரவேற்று பேசினார். நிறைவாக முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக கண்கண்ணாடிகளும்,கல்வி உதவித் தொகையையும் ஆட்சியர் வழங்கினார். நிகழ்வில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments