திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர் சண்முகசுந்தரம் பிறந்தநாள் விழா!
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள திம்மம்பாளையம் பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் பிரபல தொழிலதிபர் டி.ஆர்.எஸ். ப்ராப்பர்ட்டீஸ் & டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனருமான டி.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் 62வது பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி பரிசுகள் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
இதனை அடுத்து அவரது பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விதமாக டி.ஆர்.எஸ். ஏற்பாட்டில் காரமடை அரங்கநாதர் கோவிலில் தாசர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு வேஷ்டி, சேலை மற்றும் மதிய உணவு வழங்கினார்.தொடர்ந்து சிக்காரம் பாளையம் அருகே உள்ள அன்பு மலர் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரஸ்குமார், வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள் நெசவாளர் அணி தலைவர் கணேஷ் மூர்த்தி,சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் மனோகரன்,மீனவரணி அமைப்பாளர் ராம் குட்டி, துணை அமைப்பாளர் பாபு, ஆதி திராவிடர் நலக்குழு அணி துணை தலைவர் பன்னீர்செல்வம்,தலைமைக் கழக பேச்சாளர் நாகநந்தினி மற்றும் மாவட்ட, ஒன்றிய,கிளை கழக திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments