சரவணம்பட்டி பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா! .
கோவை மாநகர் சரவணம்பட்டி காவல் நிலையம் எல்லைக்குடகோவை சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆதவா பேக்கேஜிங் குளோபல் ஹாஸ்டல் ஓனர்ஸ் அசோசியேசன், புரோஜோன் மால் மற்றும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் பங்களிப்புடன் 64 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு சரவணம்பட்டி காவல்நிலையம் ஆய்வாளர் செந்தில்குமார் ஏற்பாட்டின் பேரில் சோதனைச்சாவடியில் புதியதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா அறையினை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
தற்போது 64 கேமராக்களும் முன்னதாக காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1400கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன அனைத்து கேமராக்களும் ஸ்கை லிங்க் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு சோதனை சாவடியில் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் 2 காவலர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று சரவணம்பட்டி காவல்நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில் கோவை மாநகரில் 25000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன இதன் மூலமாக குற்றங்கள் குறைந்துள்ளது.மேலும் குற்றவாளிகளை உடனடியாக பிடிப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைந்து பெண்கள் பாதுகாப்பான பயனத்தை தொடர உதவியாக உள்ளது என்றார். மேலும் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். இப்பகுதிகளில் மேமராக்கள் பொருத்துவதற்கு ஒத்துழைத்த நிறுவனங்களுக்கும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் காவல்துறை சார்பாக பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின்,சிங்காநல்லூர் சரகம் உதவி ஆணையாளர் வேல்முருகன் , இ3காவல் ஆய்வாளர் செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்கள் அருள்குமார், தினேஷ்குமார், குமார், ஆதவா பேக்கேஜிங் தியாகராஜன், குளோபல் ஹாஸ்டல் ஓனர்ஸ் அசோசியேசன் தலைவர் ஆனந்த் ராஜன், நாகராஜ்,செந்தில்குமார், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள், அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments