தாய்க்கும், மகளுக்கும் அரிவாள் வெட்டு . மர்மக்கும்பல் வெறிச்செயல்
காஞ்சிபுரம், நவ.29:
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தினை சேர்ந்த சிவகாமி(44)இவரது மகள் தேவதர்ஷினி(19) இருவரும் வீட்டிலிருந்ததை அறிந்து 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து தாயையும், மகளையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி தலைமறைவானது.
பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் பாலுசெட்டி சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் நடந்த படுகொலை தொடர்பாக பழிக்குப்பழியாக இத்தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதுடன் விசாரணையும் நடந்து வருகிறது.


No comments
Thank you for your comments